வரும் 26 ஆம் தேதி புதுச்சேரி சட்டசபை கூடுகிறது.முதலமைச்சர் நாராயணசாமி அன்றைய தினத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். புதுச்சேரியில் சில ஆண்டுகளாக முழுமையான பட்ஜெட்டுக்கு பதில், அரசின் செலவினங்களுக்கு அனுமதி பெறும் வகையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் 26 ஆம் தேதி நடக்கவுள்ள சட்டசபை கூட்டத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதனை தொடர்ந்து, அரசின் கூடுதல் செலவினங்களுக்கு சட்டசபையில் ஒப்புதல் பெறப்படும். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மத்திய அமைச்சரவையில் இருந்து இரண்டு தெலுங்கு தேச அமைச்சர்கள் ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தெலுங்குதேசம் இணைந்தபோது, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்தும், சிறப்பு நிதி உதவியும் அளிக்கப்படும் என்பன உள்ளிட்ட 19 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. ஆனால், சிறப்பு அந்தஸ்து கோரிக்கை நிறைவேற்றப்படாதால் தெலுங்குதேச எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், விஜயவாடாவில் நேற்றிரவு செய்தியாளர்களை சந்தித்த சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சரவையில் […]
நீட் தேர்வு எழுதுவதற்கு ஆதார் கட்டாயம் என்கிற மத்திய கல்வி வாரியம் விதித்த உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. வரும் 2018ம் ஆண்டு மாணவர்கள் எழுத போகும் நீட் தேர்விற்கு ஆதார் எண் கட்டாயம் அளிக்கப்படவேண்டும் என்றும், ஆதார் அட்டையை அடையாள அட்டையாக காட்டவேண்டும் என்றும் மத்திய அரசின் உயர் கல்வி துறை மற்றும் மனித வள மேம்பாட்டுத் துறை சார்பில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன. மேலும் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில், வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இவ்வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், […]
பிரதமர் நரேந்திர மோடி பத்ம விருதுகளை பெற டெல்லிவாசிகள் மட்டுமே தகுதி படைத்தவர்களா என கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லியில் மத்திய தகவல் ஆணையத்தின் (Central Information Commission) புதிய கட்டிடத் திறப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, பத்ம விருதுகள் குறித்து பேசினார். நாட்டின் விடுதலைக்கு பிறகு பெரும்பாலான பத்ம விருதுகள் டெல்லியைச் சேர்ந்தவர்களே அதிக அளவில் வாங்கியுள்ளனர் என கருதுவதாக கூறியுள்ள பிரதமர் மோடி, அவர்களில் பெரும்பாலானோர், அரசியல்வாதிகளின் உடல் நலத்தைப் பேணும் மருத்துவர்கள் என தெரிவித்துள்ளார். […]
லெனின், பெரியாரை தொடர்ந்து உத்தரபிரதேசத்தில் மீரட்டின் மவானா பகுதியில் அம்பேத்கரின் சிலை உடைப்பு. திரிபுரா ,தமிழ்நாட்டை தொடர்ந்து உத்தரபிரதேசத்திலும் பரவும் சிலை உடைப்பு வன்முறை தொடருகிறது.இந்நிலையில் அம்பேத்கர் சிலையை த்தரபிரதேசத்தில் மீரட்டின் மவானா பகுதியில் உடைத்துள்ளது அடுத்த சர்ச்சையாக மாறியுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள். Lenin, Periyar statue of Ambedkar constantly busting!
வேலூரில் பெரியார் சிலையையும்,திரிபுரா மாநிலத்தில் கம்யூனிஸ்ட் புரட்சியாளர் லெனின் சிலையையும் பாஜகவினர் உடைத்தற்கு பதிலடியாக, மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள ஜாதவ்பூர் பல்கலை மாணவர்கள் பாஜக நிறுவனர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் சிலையை உடைத்து முகத்தில் கறுப்பு மை பூசினர். பாஜக கூட்டணி கட்சி திரிபுராவில் நடந்த சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற பின் கம்யூனிஸ்ட் கட்சியனர் மீதான தாக்குதல் தொடங்கியுள்ளது. பாஜக தலைமையில் ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்குள் பாஜகவினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்களின் வீடுகள், அலுவலகங்களில் தாக்குதல் […]
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், திரிபுராவில் லெனின் சிலைகளை பாரதிய ஜனதா கட்சியினர் இடித்து அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தாவில் பிரதமர் மோடியின் உருவபொம்மையை எரித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். கொல்கத்தாவில் பேரணியாக சென்ற அக்கட்சியினர் பாரதிய ஜனதா கட்சியனர் மற்றும் மோடிக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். திடீரென அவர்கள் மோடியின் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தி ஆர்பாட்ட்ததில் ஈடுபட்டனர். திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது ஜனநாயக விரோத நடவடிக்கை என அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.பாரதிய ஜனதா நாட்டில் பாசிசத்தை […]
உள்துறை அமைச்சகம், சிலைகள் உடைப்பு சம்பவங்களைத் தடுக்க மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. எச்.ராஜா தமிழகத்தில் பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என கூறியிருந்த நிலையில், நேற்று வேலூர் அருகே பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது. இந்நிலையில், சிலைகள் உடைப்பு சம்பவங்களை தொடர்ந்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, சிலைகள் உடைப்பு சம்பவத்தை சகித்துக் கொள்ள கூடாது என்றும் உள்துறை அமைச்சரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். […]
இந்தியா உலகின் 4-வது வலிமையான ராணுவத்தை உடைய நாடாக உருவெடுத்துள்ளது. உலக அளவில் 133 நாடுகளின் ராணுவ வலிமை குறித்த குளோபல் ஃபயர் பவர் இண்டக்ஸ் 2017 என்ற பட்டியல் வெளியிடட்ப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் முதலிடத்தில், அமெரிக்காவும், 2-வது இடத்தில், ரஷ்யாவும், 3-வது இடத்தில் சீனாவும் உள்ளன. இந்தியா 4-வது இடத்தைப் பிடித்துள்ளது. பிரான்ஸ், பிரிட்டன், ஜப்பான், துருக்கி, ஜெர்மனி ஆகிய நாடுகள் இந்தியாவுக்கு பிந்தைய இடங்களைப் பிடித்துள்ளன. இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் 13-வது இடத்தைப் பிடித்துள்ளது. […]
நீதிமன்றம் , கார்த்தி சிதம்பரத்தை மேலும் 3 நாள் காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி வழங்கியுள்ளது. டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ, கார்த்தி சிதம்பரத்தின் 5 நாள் சிபிஐ காவல், இன்று மாலையுடன் முடிவடைவதால் அவரை மேலும் 8 நாள் காவலில் விசாரிக்க அனுமதிக்குமாறு மனு தாக்கல் செய்தது. ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் முறைகேடாக வெளிநாட்டு முதலீடுகளை திரட்ட உதவுவதற்காக, கார்த்தி சிதம்பரத்திற்கு 3 கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சம் வழங்கியதாக, இந்திராணி முகர்ஜி கூறிய […]
எல்லை பாதுகாப்பு படை, ஜீரோ பரேட் (zero parade) அணிவகுப்பை “மோடி புரோகிராம்” எனக் குறிப்பிட்ட வீரருக்கு, பிரதமரை அவமதித்து விட்டதாக ஏழு நாள் ஊதியம் அபராதமாக விதிக்கப்பட்டு உள்ளது. வருகைப் பதிவேட்டுக்கான ஜீரோ பரேடை, மேற்கு வங்க மாநிலம் நதியா மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சீவ் குமார் என்ற வீரர் மோடி புரோகிராம் எனக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார். இதை அறிந்த உயர் அதிகாரிகள், எல்லைப் பாதுகாப்புப் படைச் சட்டம் பிரிவு 40ன் கீழ் சஞ்சீவ் குமார் மீது […]
கான்ராட் சங்மா மேகாலயாவின் முதலமைச்சராக பதவியேற்றார். பா.ஜ.க., தேசிய மக்கள் கட்சி, ஐக்கிய ஜனநாயகக் கட்சி இணைந்து அங்கு ஆட்சி அமைக்கின்றன. தேசிய மக்கள் கட்சியின் தலைவர் கான்ராட் சங்மா முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், தலைநகர் ஷில்லாங்கில் இன்று பதவியேற்பு விழா நடந்தது. முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட கான்ராட் சங்மாவுக்கு, ஆளுநர் கங்கா பிரசாத் வாழ்த்து தெரிவித்தார். மேகாலயாவின் புதிய அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
திரிபுராவில் இருந்த லெனின் சிலையை, சட்டசபை தேர்தல் முடிவு வெளியான 2 நாட்களுக்குள் பாஜகவினர் அகற்றியுள்ளனர். திரிபுரா சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைக்கிறது. தேர்தல் முடிவு வெளியான 2 நாட்களுக்குள் பாஜகவினர் செய்த செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பாஜகவினர், பெலோனியா நகரில் இருந்த லெனின் சிலையை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றியுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக இருந்த லெனின் சிலையை அகற்றும்போது பாரத் மாதா கி ஜெய் என்று பாஜகவினர் […]
மார்ச் 8-ம் தேதி புதுச்சேரியில் அந்த யூனியன் பிரதேசத்தின் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட இருக்கிறது. காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பாக , காவிரி ஆற்றை உரிமை கொண்டாட எந்த மாநிலத்திற்கும் உரிமையில்லை என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கர்நாடகா மாநிலம், தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி நீர் தர உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கர்நாடகத்துக்கு 280.75 டி.எம்.சி. நீர் வழங்க உத்தரவு. மேலும் 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தாக வேண்டும் என்றும் கூறியுள்ளது. […]
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திரிபுரா, மேகாலயா, நாகலாந்து மாநில மக்களின் வாக்குரிமையை மதிப்பதாக தெரிவித்துள்ளார். காங்கிரஸ் 3 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் மேகாலயாவை தவிர்த்து மற்ற மாநிலங்களில் படுதோல்வியை சந்தித்துள்ளது. இதுகுறித்து டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, வடகிழக்கு மாநிலங்களில் கட்சியை பலப்படுத்தி, மீண்டும் அங்கு வெற்றி பெற உறுதி பூண்டிருப்பதாக கூறியுள்ளார். கட்சிக்காக தேர்தல் பணியாற்றிய ஒவ்வொரு தொண்டருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் […]
கேஸ் சிலிண்டர் விலை திடீர் குறைப்பு வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ₨46.50 குறைந்தது. அண்மை காலமாக தொடர்ந்து அதிகரித்து வந்த சிலிண்டர் விலை தற்போது திடீர் என்று குறைக்கப்பட்டுள்ளது.எனவே தற்போது ஒரு சிலிண்டரின் விலை ₨746-க்கு விற்பனை செய்யபடுகிறது. இதில் மானியம் ₨229.50 ஆகும்.
தெலுங்குதேசக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்புத் தகுதி அளிக்கக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரிவினைக்குள்ளான ஆந்திர மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்வதற்காக அந்த மாநிலத்துக்குச் சிறப்புத் தகுதியும், கூடுதல் நிதி ஒதுக்கீடும் வழங்கப்பட வேண்டும் எனத் தெலுங்கு தேசம், காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் தெலுங்குதேசக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்புத் தகுதி வழங்கக் கோரி டெல்லியில் நாடாளுமன்றக் கட்டடத்துக்கு வெளியே காந்தி சிலை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். […]
40 ஆயிரம் ரோஹிங்யா இனத்தவர் மேற்கு வங்கத்தில் குடிபெயர உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் அவர்கள், 24 பர்கானா தெற்கு மற்றும் வட மாவட்டங்களில் குடியேற முயற்சிப்பதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தியாவை நோக்கி மியான்மரில் இருந்து ஆயிரக்கணக்கில் அகதிகளாக வந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. 40 ஆயிரம் ரோஹிங்யா இனத்தவர் இந்தியாவில் தற்போது வசிப்பதாக உள்துறை அமைச்சகம் கணக்கிட்டுள்ளது. இவர்கள் மேற்கு வங்கத்தில் ஒரே இடத்தில் திரள்வதற்கு பணம் திரட்டி வருவதாகவும், அப்படி ஒரேயிடத்தில் திரண்டு […]
நாடாளுமன்ற இரண்டாவது பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் காவிரி விவகாரம், நீரவ் மோடி உட்பட முக்கிய பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம் போட்டுள்ளனர்.அதனை எதிர்கொள்ளும் வகையிலும் ஆளும் பிஜேபி கட்சி தயாராகிக்கொண்டிருக்கின்றன என அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் தெரிவித்துள்ளார்.
ஹெலி-டேக்ஸி எனும் ஹெலிகாப்டர் சேவை கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று முதல் தொடங்கவுள்ளது. தும்பி ஏவியேசன் என்ற நிறுவனம் இன்று முதல் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அனேகல்லில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டிக்கு முதற்கட்டமாக ஹெலி-டேக்ஸி எனும் ஹெலிகாப்டர் சேவை வழங்குகிறது. இதற்காக 6 பயணிகள் அமரக் கூடிய பெல் (Bell) 407 ரக ஹெலிகாப்டர்கள் 2, காலை ஆறரை மணி முதல் ஒன்பதரை மணி வரையும், மாலை 3 மணி முதல் ஆறேகால் மணி வரையும் […]