உளவுத்துறை எச்சரிக்கை ...ரோஹிங்யா இனத்தவர் மேற்கு வங்கத்தில் குடிபெயர வாய்ப்பு!

40 ஆயிரம் ரோஹிங்யா இனத்தவர் மேற்கு வங்கத்தில் குடிபெயர உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

40 ஆயிரம் ரோஹிங்யா இனத்தவர் மேற்கு வங்கத்தில் குடிபெயர உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில்  வசிக்கும் அவர்கள், 24 பர்கானா தெற்கு மற்றும் வட மாவட்டங்களில் குடியேற முயற்சிப்பதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தியாவை நோக்கி மியான்மரில் இருந்து ஆயிரக்கணக்கில் அகதிகளாக   வந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

40 ஆயிரம் ரோஹிங்யா இனத்தவர் இந்தியாவில் தற்போது வசிப்பதாக உள்துறை அமைச்சகம் கணக்கிட்டுள்ளது. இவர்கள் மேற்கு வங்கத்தில் ஒரே இடத்தில் திரள்வதற்கு பணம் திரட்டி வருவதாகவும், அப்படி ஒரேயிடத்தில் திரண்டு விட்டால் இந்திய இறையாண்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.