சிபிஎஸ்சி பொதுத்தேர்வுகளுக்கான தேதியை அறிவித்தார் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. ஆனால், மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தற்போது, கொரோனா தாக்கம் சற்று குறைந்து காணப்படுகிறது. இருப்பினும் பிரிட்டனில் புதிய வகை கொரோனா பரவி வருவதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, சிபிஎஸ்சி பொதுத்தேர்வுகளுக்கான தேதி இன்று […]
உத்தரபிரதேசத்தில் 10 ஆம் வகுப்பு மாணவரை சகமாணவரே சுட்டுக்கொன்றார். உத்தரபிரதேசத்தின் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்களுக்கு இடையே உட்காரும் இடத்திற்காக நேற்று சண்டைபோட்டுள்ளனர். இதனால் கோப்படைந்த ஒரு மாணவர் வீட்டில் இருந்து துப்பாக்கி எடுத்து வந்து சகமாணவரை சுட்டுக்கொன்றார். இதுகுறித்து போலீசார் கூறுகையில், இரண்டு சிறுவர்களும் 14 வயது என்றும், நேற்று வகுப்பில் உட்காரும் இடத்திற்காக சண்டையிட்டனர். அவர்களில் ஒருவர் மிகவும் கோபமடைந்தார். இதனால், அவர் தனது மாமாவின் துப்பாக்கியை பள்ளிக்கு […]
ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜிதேந்திர குமார் மகேஸ்வரி இன்று சிக்கிம் உயர்நீதிமன்றத்திற்கு அதன் புதிய தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டார். ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மகேஸ்வரி உள்ளிட்ட உயர்நீதிமன்றங்களின் நான்கு தலைமை நீதிபதிகளை சிக்கிம் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு எஸ்சி கல்லூரி சமீபத்தில் அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்திருந்தது. முன்னோடியில்லாத வகையில், ஆந்திர மாநில முதல்வர், அக்டோபர் 6 ம் தேதி, இந்திய தலைமை நீதிபதி (சி.ஜே.ஐ) எஸ் ஏ போப்டேவுக்கு கடிதம் எழுதியிருந்தார், ஜனநாயக […]
கொரோனா தடுப்பூசி முன்னோட்டம் அனைத்து மாநில தலைநகரங்களிலும் 3 பகுதிகளாக நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி பணிகளில் பல நாடுகள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன.இதில் சில நாடுகளில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் நான்கு தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு கொரோனா தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்துவிட்டால் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் எப்படி கொரோனா தடுப்பூசி எடுத்து செல்லப்படும்..? […]
முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோவிலிருந்து இந்தியாவில் உள்ள பிற நெட்வொர்க்குகளுக்கு அனைத்து வாய்ஸ்கால்களும் ஜனவரி 1 முதல் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. மற்ற நெட்வொர்க்கு அழைப்புகளுக்கு ஜியோ நிமிடத்திற்கு 6 பைசா கட்டணம் வசூலித்தது, ஆனால் தனது ஜியோ நெட்வொர்க்கில் உள்ள அழைப்புகளுக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கவில்லை. இந்நிலையில், இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், ஜியோ வாய்ஸ்கால் கட்டணங்களை பூஜ்ஜியமாக மாற்றுவதற்கான தனது உறுதிப்பாட்டை மதித்து, ஜியோ மீண்டும் அனைத்து வாய்ஸ் […]
கேரளாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களை இன்று இரவு 10 மணிக்குள் முடித்துக்கொள்ளுமாறு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவும் அச்சம் காரணமாகவும், உருமாறிய கொரோனா வைரஸ் பரவ அதிகளவில் வாய்ப்புள்ளதாக பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கும்படி மத்திய அரசு, மாநில அரசுக்கு அறிவித்தது. தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம் என்றும் அறிவுறுத்தியது. இந்நிலையில், கேரளாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கேராவில் பொதுமக்கள் கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், […]
2021 ஆம் ஆண்டில், சுகாதாரத்துறையில் இந்தியாவின் பங்கை நாம் பலப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், ராஜ்கோட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருப்பதன் மூலம் குஜராத் உட்பட நாடு முழுவதும் சுகாதாரம் மற்றும் மருத்துவ கல்வியில் வலுவடையும். நாட்டில் கொரோனா நோய்த்தொற்றுக்கான எண்ணிக்கை இப்போது குறைந்து வருகிறது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி […]
2021-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். காந்தேரி கிராமம் அருகே 201 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,195 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படவுள்ளது. டெல்லியிலிருந்து காணொலி மூலம் அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வருவதாகவும், உலகின் மிகப் பெரிய தடுப்பூசி திட்டத்திற்கு இந்தியா தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார். […]
ஜம்மு-காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, இந்த ஆண்டு பயங்கரவாத இயக்கத்தில் சேருபவர்களின் எண்ணிக்கை 2019-ஐ விட சற்றே அதிகமாக உள்ளது. இதில், சந்தோஷமான விஷயம் என்னவென்றால், அவர்களில் 70% பேர் கொல்லப்பட்டனர் மற்றும் கைது செய்யப்பட்டனர் எனதெரிவித்தார். 2018-19 உடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு பயங்கரவாதம் தொடர்பான சம்பவங்களில் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, 44 அப்பாவி மக்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர், அதன் எண்ணிக்கை தற்போது 38 ஆக உள்ளது. பாகிஸ்தானின் […]
இந்தியாவில் சில நாட்களில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என்று எய்ம்ஸ் இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் பற்றிய கவலைகளுக்கு மத்தியில், எய்ம்ஸ் டெல்லி இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா, ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி இங்கிலாந்தில் பயன்படுத்த ஒப்புதல் பெறுவது ஒரு பெரிய முன்னேற்றம் என்றும் தடுப்பூசி இந்தியாவுக்கு கிடைப்பதற்கு சில நாட்கள் தான் இருப்பதாகவும் கூறினார். அஸ்ட்ராசெனெகா அதன் தடுப்பூசிக்கு இங்கிலாந்து ஒழுங்குமுறை அதிகாரிகளால் நேற்று ஒப்புதல் பெற்றது இது ஒரு நல்ல […]
நாளை முதல் அனைத்து வாகனங்களிலும் பாஸ்டேக் கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்க்கான அவகாசம் பிப்.15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடிகளை கடக்கும் பொழுது வாகனங்கள் கட்டணம் செலுத்துவதற்காக நீண்ட நேரம் நிற்க கூடிய நிலை ஏற்படுகிறது. இந்தநிலையை மாற்றவும், விரைவில் பணம் வசூல் செய்யப்பட்டு செல்வதற்கு பாஸ்டேக் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜனவரி 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் பாஸ்டேக் அட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என மத்திய […]
கொரோனா தொற்றால் நிறுத்தப்பட்ட ரயில் சேவைகள் சில மாதங்களுக்குப் பிறகு புது தில்லி-கத்ரா பாதையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஜனவரி 1 முதல் மீண்டும் தனது சேவைகளைத் தொடங்கபடுகிறது. மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ட்விட்டர் பக்கத்தில்,” பக்தர்களை வைஷ்ண தேவி சன்னதிக்கு அழைத்துச் செல்லும் டெல்லி-கத்ரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஜனவரி 1 முதல் மீண்டும் தனது சேவைகளைத் தொடங்கும். இந்தியாவின் நவீன ரயில்களில் ஒன்று மீண்டும் பக்தர்களையும் வரவேற்கத் தயாராக உள்ளது என்று […]
திட்டங்களின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்காக பிரதமர் மோடி 34 வது பிரகதி கூட்டத்திற்கு தலைமை தாங்ககினார். பல்வேறு திட்டங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் குறைகள் குறித்து இன்றைய கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. ரயில்வே அமைச்சகம், சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் ஆகியவற்றின் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. சுமார் ஒரு இலட்சம் கோடி மதிப்பிலான இந்தத் திட்டங்கள், உத்தரப் பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, தில்லி, ஹரியானா, […]
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க காணொலி மூலம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். டெல்லியிலிருந்து காணொலி மூலம் பிரதமர் மோடி புதிதாக அமைக்கப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்று அடிக்கல் நாட்டினார். காந்தேரி கிராமம் அருகே 201 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,195 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படவுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனையின் 9 கட்டடங்களின் வரைபடங்களுக்கு தற்காலிக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்படவிருக்கும் இந்த மருத்துவமனையின் பணிகள் 2022-ம் ஆண்டு மத்தியில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 750 […]
ஜனவரி 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் பாஸ்டேக் அட்டை கட்டாயம் என மத்திய சாலை போக்குவரத்துக்கு நெடுஞ்சாலை துறை உத்தரவிட்டுள்ளது. சுங்கச்சாவடிகளை கடக்கும் பொழுது வாகனங்கள் கட்டணம் செலுத்துவதற்காக நீண்ட நேரம் நிற்க கூடிய நிலை ஏற்படுகிறது. இந்த நிலையை மாற்றுவதற்காகவும், பணம் விரைவில் வசூலிக்கப்பட்டு விரைவாக செல்வதற்காகவும் பாஸ்டேக் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள […]
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னதாக மங்களூரு நகரில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா: கொரோனா வைரஸ் தொற்று மேலும் பரவுவதைத் தடுக்கும் வகையில், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னதாக மங்களூரு நகரில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. மங்களூரு நகர போலீஸ் கமிஷனர் விகாஷ் குமார் மற்றும் மங்களூரு நகரத்தின் கூடுதல் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் இந்த தடை உத்தரவுகள் இன்று மாலை 6 மணி முதல் 2021 ஜனவரி 1 ஆம் தேதி காலை 6 மணி வரை […]
இந்தியாவில் தற்போது உருமாறிய கொரோனாவால் தற்போது 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனியில் இருந்து திரும்பிய பயணிகளை கண்டறியும் பணிகளை மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் மேற்கொள்ளும்படி மத்திய அரசு தெரிவித்தது. பின்னர், சில நாட்களுக்கு முன் பிரிட்டனில் பரவியுள்ள உருமாறிய கொரோனா இந்தியாவிலும் பரவியது என அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, தினமும் மத்திய அரசு உருமாறிய கொரோனாவால் பதியாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை அறிவித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் மேலும் 5 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்றுவரை […]
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அம்மாநில சட்டசபையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளார். விவசாயிகளின் பிரச்சினை குறித்து விவாதிப்பது தொடர்பாக கூட்டப்பட்ட சிறப்பு அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.3 புதிய வேளாண் சட்டங்களை உடனடியாக ரத்து செய்யக் கோரி தீர்மானத்தை நிறைவேற்றிய பின் பினராயி விஜயன் பேசுகையில், வரலாற்றில் விவசாயிகளால் நடத்தப்பட்ட மிகச் சிறந்த போராட்டங்களில் ஒன்றாகும் என்று கூறினார்.நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்கள் “கார்ப்பரேட் சார்புடையவை” என்றும், விவசாயிகள் போராட்டத்தில் குறைந்தது 32 விவசாயிகள் […]
எதிர் செயல் செய்யாமல் விழிப்புணர்வாக பதில் செயல் செய்யும் மனித ஆற்றலின் மூலம் கொரோனா பாதிப்புக்கு தீர்வு காண முடியும் என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி: நம் அனைவர் வாழ்வையும் தலைகீழாக புரட்டிப்போட்டதில், 2020ம் ஆண்டு இந்த தலைமுறை மீது அழிக்க முடியாத சுவடை பதித்திருக்கிறது. கடந்த நூற்றாண்டைத் திரும்பிப் பார்த்தால், போர்கள், பெருந்தொற்றுகள் மற்றும் இயற்கை பேரிடர்களைப் பொறுத்தவரை 21ம் நூற்றாண்டின் முதல் […]
மாஸ்டர் படம் வெளியாக உள்ளதால் கேரளாவில் திரையரங்குகளை திறக்க முதல்வர் பினராயி விஜயனை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். தளபதி விஜய் நடிப்பில் உருவாகி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற திரைப்படம் பிகில். அதற்குப் பின் இவரது நடிப்பில் 64 ஆவது படமாக மாஸ்டர் திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி நடித்து உள்ளார். இவருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். இப்படமானது 2021-ஆம் […]