இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே தான் செல்கிறது. கொரோனா வைரஸின் தாக்கம் உலகளவில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், இந்தியாவில் குறைந்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை இந்தியாவில் 8,845,617 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,30,109 பேர் உயிரிழந்துள்ளனர். 82,47,950 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் குணமடைந்து தான் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதிதாக 30,715 பேர் கொரோனா […]
தீபாவளி தினத்தன்று முலுகு மாவட்டத்தில் கோதாவரி ஆற்றில் நான்கு இளைஞர்கள் மூழ்கி உயிரிழந்தனர். சனிக்கிழமை மாலை நண்பரின் பிறந்த நாளைக் கொண்டாட சென்றபோது இந்த விபரீதம் நடந்துள்ளது. இரண்டு பேரின் சடலங்கள் சனிக்கிழமையன்று மீட்கப்பட்ட நிலையில், மீதமுள்ளவை நேற்று காலை மீட்கப்பட்டன. இறந்த 4 பேரும் ராயவரபு பிரகாஷ் (19), தும்மா கார்த்திக் (19), கே அன்வேஷ் (20), எஸ் ஸ்ரீகாந்த் (20) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். முலுகுவில் உள்ள வெங்கடபுரம் கிராமத்தின் ரங்கராஜபுரம் காலனி அருகே […]
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள புலந்த்ஷர் மாவட்டத்தில் மொஹல்லா எனும் இடத்தில் வசித்து வரக்கூடிய ராம்வீர் என்பவரின் சகோதரி தனது அண்ணனுடன் சேர்ந்து மளிகை கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இந்த கடையில் அண்ணன் இல்லாத நேரங்களில் மற்றும் வேலை அதிகமாக இருக்கும் நேரங்களில் சகோதரியும் சேர்ந்து கடையை கவனித்துக் கொள்வது வழக்கம். அவர்களின் கடைக்கு அருகில் வசிக்கக்கூடிய ஆகாஷ் என்பவர் அடிக்கடி கடைக்கு வரும் பொழுதெல்லாம் ராம் சகோதரியை நக்கல் அடித்துக் கொண்டே இருந்துள்ளார். இதுகுறித்து […]
நேற்று சிறப்பு பூஜை முடிந்தவுடன் உத்தரகாண்டில் உள்ள கங்கோத்ரி கோயிலின் நடை குளிர்காலத்திற்காக மூடப்பட்டதால் அதன் இணையதளங்களும் மூடப்படுகிறது. ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் நேற்று பூஜை செய்த பின்னர் கோயில் நடை மதியம் 12:15 மணிக்கு மூடப்பட்டதாக உத்தரகண்ட் சார்தம் தேவஸ்தானம் வாரிய ஊடக பொறுப்பாளர் ஹரிஷ் கவுட் தெரிவித்தார். இந்நிலையில், கோவில் நடை மூடப்பட்ட பின்னர், முகபா கிராமத்திற்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு பல்லக்கில் கங்கை தேவியின் சிலை கொண்டு செல்லப்பட்டது, அங்கு வைத்து குளிர்காலத்தில் […]
பண்டிகை நாட்களில் நம் வீட்டை சுத்தம் செய்வது வழக்கம். அந்த வகையில் ஒரு பெண் ஒருவர் வீட்டு சுத்தம் செய்வதாகக் கூறி, ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகைகளை குப்பையில் வீசி உள்ளார். புனேவில், பிம்பிள் சௌதாகர், என்ற பகுதியில் வசித்து வரும் ரேகா என்னும் பெண், தீபாவளியை முன்னிட்டு, தனது வீட்டை சுத்தம் செய்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த பழைய பொருட்களை எல்லாம் எடுத்து வெளியே வீசும் போது, நீண்ட நாட்களாக வைத்திருந்த ஒரு பழைய ஹேண்ட் […]
சபரிமலை ஐயப்பன் கோவிலின் மண்டல விளக்கு பூஜையை முன்னிட்டு இன்று முதல் முதல் பக்தர்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின், டிசம்பர் 27 ஆம் தேதி கோயில் நடை அடைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தினசரி பூஜை இடைவேளைக்காக மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டு மறுபடியும் மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. அடுத்ததாக, இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். இந்த நிலையில், மண்டல விளக்கு பூஜைக்கு நாளொன்றுக்கு ஆயிரம் பக்தர்களையும் அதன்பின், […]
பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெற்று வெற்றிபெற்ற நிலையில் , நிதிஷ் குமார் இன்று முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார். 243 தொகுதிகளை கொண்ட பீகாரில் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது. இங்கு ஆட்சி அமைக்க 122 உறுப்பினர்கள் தேவை. 3 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் பா.ஜ.க. 74 இடங்களையும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களையும், வி.ஐ.பி. மற்றும் எச்.ஏ.எம்.எஸ். கட்சிகள் தலா 4 […]
பீகார் மாநிலத்தில் 3 கட்டங்களாக நடந்த தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் பா.ஜ.க. 74 இடங்களையும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களையும், வி.ஐ.பி. மற்றும் எச்.ஏ.எம்.எஸ். கட்சிகள் தலா 4 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதைத்தொடர்ந்து, பாட்னாவில் இன்று ராஜ்நாத் சிங் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கிய தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பீகார் முதல்வராக மீண்டும் நிதிஷ்குமார் தேர்வு செய்யப்பட்டார். நிதிஷ்குமார் பீகார் […]
விபச்சார தொழில் செய்யும் எஜமானியிடம் ஆட்டையை போட நினைத்து கையும் களவுமாக மாட்டிக்கொண்ட வேலைக்காரி. குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் எனும் இடத்தில் வசித்து வரக்கூடிய வீட்டு வேலை செய்யும் பெண்மணி தனது எஜமானிக்கு உண்மையாக இருக்க நினைக்காமல் எஜமானியின் ஆடம்பர வாழ்வைப் பார்த்து பொறாமை பட்டுள்ளார். கணவன் இறந்த பின்பு விபசார தொழில் செய்து வந்த அந்த எஜமானிக்கு அந்த தொழில் மூலம் கிடைக்கக்கூடிய வருமானத்தில் கோடிக்கணக்கில் சம்பாதித்து பல வீடுகள் கட்டி அவருடைய மகளுக்கும் […]
அடுத்த மாத இறுதிக்குள் அஸ்ட்ராஜெனிகா நிறுவனத்தின் 10 கோடி கொரோனா தடுப்பூசி இந்தியாவுக்கு வழங்கப்படும் என்று சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவை சேர்ந்த சீரம் நிறுவனம் இங்கிலாந்தின் அஸ்ட்ராஜெனிகா என்ற மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து கொரோனா தடுப்பூசி தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனத்தின் தடுப்பு மருந்து இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாகவும், மருந்து நல்ல பலன் தருவதாகவும் சீரம் நிறுவனத் […]
பாலைவனமோ? பனிமலையோ? ராணுவ வீரர்கள் எங்கு இருக்கிறார்களோ, அங்கு தான் என்னுடைய தீபாவளி. இன்று நாடு முழுவதும் தீபாவளி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிற நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு ஆண்டும், எல்லையில் உள்ள ராணுவ வீரர்களுடன் இணைந்து தீபாவளியை கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளியை ராஜஸ்தான் ஜெய்சால்மரில் உள்ள லாங்கிவாலா முகாமில், தீபாவளியை கொண்டாடியுள்ளார். அப்போது ராணுவ வீரர்கள் மத்தியில் பேசுகையில், பனிமாலையோ, பாலைவனமோ ராணுவ வீரர்கள் எங்கையோ அங்கு தான் […]
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்தநாள். தலைவர்கள் மரியாதை. இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து, டெல்லியில் உள்ள நேருவின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளார். மேலும், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில், ‘நாட்டின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளில்,அவருக்கு மரியாதை செலுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார். மேலும், பல தலைவர்கள் ட்வீட்டர் […]
அயோத்தியில் களைகட்டும் தீபாவளி கொண்டாட்டம். இந்தியா முழுவதும் இன்று தீபாவளி திருநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், உத்திரபிரதேசத்தில் உள்ள அயோத்தியில் தீபாவளி திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அயோத்தி நகரமே வண்ணக்கோலம் பூண்டுள்ள நிலையில், கட்டடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு நகரமெங்கும் ஜொலித்துக் கொண்டுள்ளது. இந்நிலையில், ராமர், லட்சுமணர், சீதை, அனுமர் வேடமிட்டவர்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஹெலிகாப்டரில் சரயு நதிக்கரையில் வந்திறங்கினார். இவர்களை ஆளுநர் ஆனந்திபென் பட்டேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் வரவேற்று […]
தீபஒளி திருநாளில் எல்லையிலுள்ள ராணுவ வீரர்களுக்காக விளக்கேற்றுங்கள் என பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார். நாடு முழுவதிலும் இன்று தீபாவளித் திருநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சில இடங்களில் பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவதற்கு மக்கள் நலன் கருதி அனுமதி மறுக்கப்பட்டு இருந்தாலும், பல இடங்களில் மக்களின் சந்தோஷத்திற்காக பாதுகாப்புடன் சில கட்டுப்பாடுகளை அறிவித்து அரசு அனுமதித்துள்ளது. மக்கள் மிக மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாடி வரக்கூடிய இந்த நாளில் பிரதமர் நரேந்திர மோடி […]
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 45 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவால் புதியதாக பாதிப்பு ஏற்பட்டு வந்தாலும், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துக்கொண்டு தான் செல்கிறது. இதுவரை இந்தியாவில் 8,773,243 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 129,225 பேர் உயிரிழந்துள்ளனர், 8,161,467 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தவர்கள் மற்றும் குணமாகியவர்கள் தவிர 482,551 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதிதாக […]
ட்வீட்டரில் முடக்கி வைக்கப்பட்ட அமித்ஷாவின் சுயவிவர படம். இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அடுத்தபடியாக, ட்வீட்டரில் அதிகமான ஃபாலொவெர்சை கொண்டவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. இவரை, 23.6 மில்லியன் பேர் பின்தொடருகின்றனர். இந்நிலையில், இவரது ட்வீட்டர் பக்கத்தில், சில நிமிடங்கள் இவரது சுய விவர படம் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, ‘media not displayed’ என தோன்றியது. இதுகுறித்து, ட்வீட்டர் தரப்பில், புகைப்படம் பதிப்புரிமை விவகாரம் தொடர்பான ஒரு அறிக்கைக்கு பதில் கிடைக்காத நிலையில் […]
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் கொரோனாவாழ் புதிதாக 43 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் தற்பொழுது பல இடங்களில் கனமழை மற்றும் அதிகமான குளிர் நிலவினாலும், கொரோனாவின் தாக்கம் குறைந்து கொண்டு தான் செல்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 43,861 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 521 பேர் நேற்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றால் 8,727,900 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 128,686 பேர் உயிரிழந்துள்ளனர், […]
அந்தமான் தீவுகளில் மர தவளைகளின் புதிய வகை கண்டுபிடிக்கப்பட்டது. அந்தமான் தீவுகள் மற்றும் வடகிழக்கு இந்தியாவில் பழைய உலக மர தவளை இனத்தின் புதிய வகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் நேற்று தெரிவித்தனர். டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.டி. பிஜு தலைமையிலான ஒரு ஆய்வில், இந்தியா, சீனா, இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழுவுடன் சேர்ந்து, முதல் முறையாக ஒரு மரத் தவளை இனமான ரோஹானிக்சலஸ் விட்டட்டஸ் (ஸ்ட்ரைப் பப்பில்-கூடு தவளை) என்று […]
தீபாவளி பண்டிகையானது நவம்பர் 14-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது . தமிழர்கள் முதற்கொண்டு அனைத்து மதத்தினரும்,பிற நாட்டவர் என பலரும் தற்போது தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர் . இந்தாண்டு நவம்பர் 14-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. நராகசுரன் என்ற அரக்கன் இறந்த தினத்தை கொண்டாட தீபாவளி தினம் கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது . மனிதனாக இருப்பினும் துர்க்குணங்களையுடைய பூமாதேவியின் மகனான பவுமன் என்னும் நரகாசுரன் தேவர்கள் மற்றும் மக்களுக்கு பல கொடுமைகளையும், துன்பங்களையும் கொடுத்து வந்தான் […]
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இதனால், வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது. இந்த வருடம் நாடு முழுவதும் சுமார் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட சி.பி.எஸ்.சி. மாணவர்கள் பொதுத் தேர்வை எழுத உள்ளனர். இதனால், 9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சில பள்ளிகளில் கொரோனா நெறிமுறைகளை பின் பற்றி விருப்பம் உள்ள மாணவர்கள் பள்ளிக்கு சென்று ஆசிரியர்களிடம் விளக்கங்ளை கேட்டறிந்து வருகின்றனர். இந்நிலையில் […]