பஞ்சாப் மாநிலம், பெரோஸ்பூரீல் பாகிஸ்தான் எல்லை பகுதியில் ஆளில்லா விமானம் ஒன்று இரவு 12 மணியளவில் இந்திய எல்லைக்குள் நுழைந்ததாக எல்லை பாதுகாப்பு படையினர் உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.
இதனையடுத்து, ரோந்து பணிகள் முடக்கிவைக்கப்பட்டுள்ள நிலையில், பஞ்சாப் போலீசார், உளவுத் துறையினர் மற்றும் பிஎஸ்எஃப் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும், அந்த விமானங்கள் மூலம் ஆயுதக் கடத்தல் நடைபெறுகிறதா என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்னர், பாகிஸ்தானிலிருந்து ஆளில்லா விமானங்கள் மூலம் ஆயுதங்களை இந்திய எல்லையில் வீசிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து வான்வெளி மூலம் ஆயுதங்கள் கடத்துவதை தடுக்க பணிகளை மேற்கொள்ளுமாறு இராணுவம் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…