பச்சிளங்குழந்தையை தேவாலயத்தில் விட்டுச் சென்ற பெற்றோர் கைது..!

கேரள மாநிலத்தில், பிறந்து இரண்டு நாட்களே ஆன பச்சிளங்குழந்தையை கிறிஸ்தவ தேவாலயத்தில் விட்டுச் சென்ற பெற்றோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலத்தில், பிறந்து இரண்டு நாட்களே ஆன பச்சிளங்குழந்தையை கிறிஸ்தவ தேவாலயத்தில் விட்டுச் சென்ற பெற்றோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

எடப்பள்ளி (Edappally ) என்ற இடத்தில் உள்ள தேவாலயத்தின் முன்பகுதியில் வெள்ளிக்கிழமை அனாதையாக விடப்பட்டிருந்த பச்சிளங் குழந்தையை போலீசார் மீட்டனர்.

இதையடுத்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில், குழந்தையுடன் தம்பதியர் வருவதும், பெற்ற தந்தையே குழந்தையை கடைசியாக முத்தமிட்டு விட்டுச் செல்வதும் பதிவாகி இருப்பது ஆய்வில் தெரிய வந்தது.

இதன் மூலம் குழந்தையை விட்டுச் சென்ற பிட்டோ – பிரதிபா தம்பதியரை அடையாளம் கண்டறிந்த போலீசார், அவர்களைக் கைது செய்தனர். ஏற்கனவே மூன்று குழந்தைகள் இருப்பதாகவும், நான்காவதாக பிறந்த குழந்தையை வளர்க்க முடியாமல் தேவாலயத்தில் விட்டுச் சென்றதாகவும் போலீசாரிடம் அந்தத் தம்பதியர் தெரிவித்துள்ளனர்.