காதல் திருமணங்களில் பெற்றோரின் சம்மதம்..! ஆய்வு செய்து சட்டம் இயற்றப்படும்..குஜராத் முதல்வர் பேச்சு.!

குஜாரத்தில் காதல் திருமணங்கள் செய்பவர்கள், பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்வதை கட்டாயமாக்குவது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து சட்டம்

Love Marriage

குஜாரத்தில்காதல்திருமணங்கள்செய்பவர்கள், பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்வதை கட்டாயமாக்குவது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து சட்டம் இயற்றப்படுவதற்கு பரிசீலித்து வருவதாக முதல்வர் பூபேந்திர படேல் தெரிவித்துள்ளார்.

நேற்று மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள நுகர் கிராமத்தில் மாணவர்களை கௌரவிக்கும் படிதார் சமூக சமூகம் சார்ந்து இயங்கும் சர்தார் படேல் குழுவின் விழாவில்பூபேந்திர படேல்கலந்துகொண்டார். அப்பொழுது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, சிறுமிகள் திருமணத்திற்காக தப்பிச் செல்லும் சம்பவங்கள் குறித்து ஆய்வு செய்யுமாறு மாநில சுகாதார அமைச்சர் ருஷிகேஷ் படேல் தன்னிடம் கூறியதாக தெரிவித்த அவர்,  காதல் திருமணங்களில் பெற்றோர் அனுமதி கட்டாயம் என்பது குறித்து ஆய்வு நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும், அரசியலமைப்பின் எல்லைக்குட்பட்டு சட்டம் இயற்றப்படும் எனவும் பூபேந்திர படேல் உறுதியளித்துள்ளார். காதல் திருமணங்களில் பெற்றோரின் சம்மதம் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்ற படிதார் சமூகத்தின் சில பிரிவினரின் கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

2015 ஆம் ஆண்டு சமூகத்தின் ஒதுக்கீட்டு போராட்டத்திற்கு தலைமை தாங்கிய பாடிதர் குழுவான சர்தார் படேல் குழு (SPG) இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தது. இதில் மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர் நிதின் படேல் மற்றும் பல படிதார் தலைவர்களும் கலந்து கொண்டனர்.