ரூ.30 ஆயிரம் கோடிக்கு படேல் சிலை விற்பனை ! OLX -ல் விளம்பரம் வெளியிட்ட மர்ம நபர் மீது வழக்குப்பதிவு

ரூ.30 ஆயிரம் கோடிக்கு படேல் சிலை விற்பனை என்று   OLX -ல் விளம்பரம் வெளியிட்ட மர்ம நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரூ.30 ஆயிரம் கோடிக்கு படேல் சிலை விற்பனை என்று   OLX -ல் விளம்பரம் வெளியிட்ட மர்ம நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரூ.30 ஆயிரம் கோடிக்கு சர்தார் வல்லபபாய் படேல் சிலை கொரோனா வைரஸுக்கான மருந்து மற்றும் மருத்துவ சாதனங்கள் வாங்குவதற்கு நன்கொடையாக வழங்குவதற்காக விற்பனைக்கு வர உள்ளதாக  OLX நிறுவன இணையப்பக்கத்தில் மர்ம நபர் ஒருவர் விளம்பரம் செய்தார். அதில், அவசரம்! ஒற்றுமைக்கான  சிலை விற்பனைக்கு. மருத்துவமனைகள் மற்றும் சாதனங்களுக்கான அவசரப் பணத்தின்  தேவைக்காக என்று இடம்பெற்றிருந்தது.

unknown node

இது தொடர்பாக செய்தி வெளியானதை தொடர்ந்து, படேல்  சிலை வளாக நிர்வாகிகள் போலீசில் புகார் செய்துள்ளனர்.இதனையடுத்து  இந்த விளம்பரத்தை OLX  நிர்வாகம் நீக்கிவிட்டது.மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து  விளம்பரம் செய்த நபரைத் தேடி வருகின்றனர்.

ரூ.30 ஆயிரம் கோடிக்கு படேல் சிலை விற்பனை ! OLX -ல் விளம்பரம் வெளியிட்ட மர்ம நபர் மீது வழக்குப்பதிவு