மக்களே ஜாக்கிரதை..! இந்தியாவில் 12 ஆயிரத்தை கடந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு..!

இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 12,491 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 12,491 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய முழுவதும் கொரோனா வைரஸ்  தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோல் கொரோனா தடுப்பு வழிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

12 ஆயிரத்தை கடந்த தொற்று பாதிப்பு

unknown node

இந்த நிலையில், இன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்தை கடந்துள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 12,491 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 40 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 5,31,190 லிருந்து, 5,31,230 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று 8,175 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்த நிலையில், இன்று 10,827 பேர் வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 63,562 லிருந்து, 65,286 ஆக உயர்ந்துள்ளது. மேலும், நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,48,45,401 லிருந்து 4,48,57,992 ஆக உயர்ந்துள்ளது.