மக்களே எச்சரிக்கை..! மத்திய மேற்கு வங்கக்கடலில் 'சிட்ரங்' புயல்..! – இந்திய வானிலை அமையம்

மத்திய மேற்கு வங்கக்கடலில் 'சிட்ரங்' புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவிப்பு.

மத்திய மேற்கு வங்கக்கடலில் ‘சிட்ரங்’ புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவிப்பு.

அந்தமான் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. 20ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி மத்திய வங்க கடலில் வலுவடைந்து புயலாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயலுக்கு ‘சிட்ரங்’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்பெயர் தாயலாந்து நாட்டால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில், இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.