கொரோனா தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு தேவை..! பிரதமர் மோடி அறிவுரை..!

கொரோனா தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு தேவை என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

கொரோனா தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு தேவை என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை)‘மன் கி பாத்’நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். பிரதமர் மோடியின் மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சியின் 99வது நிகழ்ச்சி இதுவாகும். இந்த நிகழ்ச்சி இதுவரை 98 அத்தியாயங்களை நிறைவு செய்துள்ளது.

மனதின் குரல் என்பது அகில இந்திய வானொலியில் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பப்படும் ஒரு மாதாந்திர உரையாகும், இதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுடன் தொடர்பு கொள்கிறார். இந்த நிகழ்வில் பேசிய அவர் கொரோனா தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு தேவை எனக் கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், பண்டிகை காலங்கள் நெருங்கும் நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதாகவும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் கூறினார். மக்கள் அனைவரும் சுகாதாரமான சூழலை அமைத்து கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.