வடமாநிலங்களில் முக்கிய பண்டிகையான கங்கா தசராவில் உத்திரப்பிரதேசம், உத்தரகண்ட் மக்கள் சமூக இடைவெளியை மறந்து புனித நீராடி வருகின்றனர்.
கொரோனா இரண்டாம் அலையால் பெரிய பாதிப்புகளை இந்தியா சந்தித்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, முகக்கவசம் அணிவது போன்ற பல தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கடந்த வருடமும், இந்த வருடமும் பல கோவில் திருவிழாக்கள் பக்தர்களின்றி நடைபெற்றது.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் நடந்த கும்பமேளா பண்டிகையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றாக கலந்து கொண்டு சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டனர். இதனால் கொரோனா பாதிப்பு மிக அதிகளவில் அதிகரிக்க தொடங்கியது. இந்நிலையில், தற்போது கங்கா தசரா பண்டிகையில் உத்திரப்பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மக்கள் சமூக இடைவெளியை மறந்து புனித நீராடி வருகின்றனர்.
இதுகுறித்து வட்ட அதிகாரி தெரிவிக்கையில், வீடுகளில் மக்களை புனித நீராடும் படி அறிவித்திருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா பாதிப்பு இல்லை என்ற ஆர்.டி.பி.சி.ஆர் சான்றிதழ் வைத்திருப்பவர்களை கரையோரப்பகுதியில் அனுமதிப்பதாக தெரிவித்துள்ளனர். கொரோனா விதிகளை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தி வருவதாக கூறியுள்ளார்.
சென்னை : தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாநில அரசு பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல்…
வாஷிங்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடத்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…
சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
ஹரியானா : பஹல்காமில் நடந்த தாக்குதலில் திருமணம் முடிந்து ஆறு நாட்களுக்குப் பிறகு தனது கணவர் பிரிந்த போதிலும், தாக்குதல்…