மகாராஷ்டிராவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1.32 லட்சமாக உயர்வு!

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 5,366 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்ட நிலையில், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 1.32 லட்சத்தை கடந்தது.

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 5,366 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்ட நிலையில், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 1.32 லட்சத்தை கடந்தது.

இந்தியாவில் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. அந்த வகையில் அங்கு இதுவரை இல்லாத அவளாக, இன்று ஒரே நாளில் 7,862  பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,38,461 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 226 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,893 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோரின் விகிதம் 4.15 சதவீதமாக உள்ளது. மேலும் 5,366 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,32,625 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோரின் விகிதம் 55.62 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அதுமட்டுமின்றி, மகாராஷ்டிராவில் 93,652 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

unknown node