ஊரடங்கு காலத்திலும் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான வசதியை செய்ய வேண்டும் – பிரதமர் மோடி

Prime Minister Modi reviewed the status of the corona, the corona vaccine functions and drugs, oxygen reserves, etc.

பிரதமர் மோடி, கொரோனா நிலவரம் கொரோனா தடுப்பூசி பணிகள் மற்றும் மருந்துகள், ஆக்சிஜன் கையிருப்பு போன்றவை குறித்து ஆய்வு நடத்தினார்.

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை மிகவும் தீவிரமாக பரவி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், கொரோனா நிலவரம் கொரோனா தடுப்பூசி பணிகள் மற்றும் மருந்துகள், ஆக்சிஜன் கையிருப்பு போன்றவை குறித்து ஆய்வு நடத்தினார்.

அவர் பேசுகையில், ஒவ்வொரு மாநிலங்களிலும் வீணாகும் தடுப்பூசியின்  அளவு குறித்து கேட்டறிந்தார். இதுவரை 17.7 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டிருப்பதாகவும், 45 வயதுக்கு மேற்பட்ட பிரிவினரில் 31 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டிருப்பதாகவும் பிரதமரிடம் தெரிவித்துள்ளனர்.

மேலும், வைரஸ் பரவாமல் தடுக்க விரைவான மற்றும் முழுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். 1 லட்சத்துக்கு மேற்பட்ட நோயாளிகளை கொண்டிருக்கும் 12 மாநிலங்கள் மற்றும் அதிக பாதிப்புகளை கொண்டிருக்கும் மாவட்டங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

இந்த கூட்டத்தில், யூனியன் அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிர்மலா சீதாராமன், ஹர்ஷ் வர்தன், பியூஷ் கோயல், மன்சுக் மண்டவியா ஆகியோர் கலந்து கொண்டனர்.