சுட்டு கொல்லப்பட்ட பெப்ஸி ஊழியர்! சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ!

உத்தரபிரதேசம்: உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மதுராவில் சாட்டா நகரில் உள்ள பெப்சி தொழிற்சாலையில் பணிபுரியும் பிரேம் சிங் மர்ம நபர்களால் துப்பாக்கியால் தலையில்

UP-Pepsi Staff

உத்தரபிரதேசம்:உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மதுராவில் சாட்டா நகரில் உள்ள பெப்சி தொழிற்சாலையில் பணிபுரியும் பிரேம் சிங் மர்ம நபர்களால் துப்பாக்கியால் தலையில் சுடப்பட்டுள்ளார். இவர் பெப்சி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.

சம்பவம் நடந்த அன்று சக ஊழியருடன் பைக்கில் இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​மர்ம ஆசாமிகள் அவரைத் தலையில் சுட்டுக் கொன்று விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். அங்கு நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இந்த சம்பவம் பதிவாகியிருந்தது.

அந்த வீடியோவில், ப்ரெம்சிங் பைக்கின் பின்னால் அமர்ந்து கொண்டும் வருவார், அந்த சக ஊழியர் பைக்கை ஒட்டி கொண்டு போவார். அப்போது பின்னில் அமர்ந்து இருந்த பிரேம் சிம்ரன் திடீரென அவரது முதுகில் சாய்ந்து நிலை தடுமாறி தரையில் விழுந்து விடுவார்.

அதனை கண்ட அந்த சக ஊழியர் வண்டியை நிறுத்தி விட்டு, உதவிக்காக நடு ரோட்டில் கையை அசைத்து உதவி கேட்பார், இது அனைத்தும் நாம் அந்த வீடியோவில் காணலாம். அதனை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி பிரேம் சிங்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகள் யார்?, எதற்காக இதை செய்தனர் என மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த மனதை உலுக்கும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

சுட்டு கொல்லப்பட்ட பெப்ஸி ஊழியர்! சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ!