தாய்மொழியில் தேர்வு எழுத அனுமதி; யுஜிசி அறிவுறுத்தல்.!

தாய் மொழியில் தேர்வு எழுத அனுமதிக்கவேண்டும் என உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

தாய் மொழியில் தேர்வு எழுத அனுமதிக்கவேண்டும் என உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

பல்கலைக்கழக மானியக்குழு(யுஜிசி) மாணவர்களை அவர்களது தாய் மொழியில் தேர்வு எழுதிட அனுமதிக்குமாறு, பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. பல்கலைக்கழகங்களில் ஆங்கிலத்தில் பாடம் கற்பித்தாலும், தாய் மொழியில் தேர்வு எழுத அனுமதிக்கவேண்டும்.

ஆங்கிலத்திற்கு மட்டும் முக்கியத்துவம் தராமல் இந்தியாவின் அனைத்து உள்ளூர் மொழிகளுக்கும் முக்கியத்துவம் தரும் வகையில், தாய் மொழியை ஊக்கப்படுத்துவது அவசியம் என யுஜிசி தலைவர் ஜெகதேஷ் குமார், பல்கலைக்கழகங்களுக்கு கடிதம் மூலமாக வலியுறுத்தியுள்ளார்.

தாய்மொழி கற்றல், கற்பித்தலை ஆதரிப்பதில் உயர்கல்வி நிறுவனங்கள் முக்கிய பங்காற்றுகின்றன என அவர் மேலும் தெரிவித்தார். மாணவர்கள் தங்கள் தாய்மொழியில் படித்து, தேர்வினை எழுதும்போது மனஅழுத்தமின்றி கல்வி கற்கலாம், மேலும் தமிழ் முதலான தாய்மொழியில் இருந்து முக்கியமான நூல்களை மொழிபெயர்த்து அதனையும் கற்பிக்க முயற்சி செய்யவேண்டும் என அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே புதிய கல்விக்கொள்கை மூலம் தாய்மொழியில் கற்பிப்பதை தொடர்ந்து வலியுறுத்திவந்த நிலையில், மாணவர்கள் தங்கள் தாய்மொழியில் கற்றால் அவர்கள் சிறப்பாக மனஅழுத்தமின்றி பயில முடியும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஏற்கனவே இது குறித்து பல மாநிலங்கள் தாய்மொழி கற்றல் தொடர்பாக வலியுறுத்திவந்த நிலையில், யுஜிசி தற்போது பல்கலைக்கழகங்களுக்கு இந்த அறிவுறுத்தலை வழங்கியிருக்கிறது.