குழாய் வழி கியாஸ் வினியோகம்.. நாளை திறந்து வைக்கும் பிரதமர் ..!

Prime Minister Modi will inaugurate the 450 km pipeline GAS distribution system from Kochi to Mangalore through video tomorrow.

கொச்சியில் இருந்து மங்களூருக்கு 450 கிலோ மீட்டர் குழாய் வழி கியாஸ் வினியோக அமைப்பை பிரதமர் மோடி நாளை காணொளி மூலம் திறந்து வைக்கிறார். இந்த மூலம் குழாய் வழியாக தினமும் 1.2 கோடி கனமீட்டர் கேஸ் அனுப்ப முடியும். கெயில் நிறுவனம் இந்த கேஸ் குழாய் இணைப்பை உருவாக்கியுள்ளது. எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களை இந்த குழாய் அமைப்பு கடந்து செல்கிறது.

மொத்தம் ரூ. 3,000 கோடி செலவில் இந்த திட்டப்பணி முடிக்கப்பட்டுள்ளது.” ஒரு நாடு ஒரு கேஸ் விநியோக அமைப்பு” நோக்கத்தில் இது ஒரு முக்கியமான மைல்கல் ஆகும்.