#Plane crashes: கோவில் மீது மோதி விமானம் விபத்து – விமானி உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தில் விமானம் ஒன்று கோவிலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானி ஒருவர் உயிரிழப்பு.

மத்திய பிரதேசத்தில் விமானம் ஒன்று கோவிலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானி ஒருவர் உயிரிழப்பு.

மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் இன்று அதிகாலை பயிற்சியின் போது விமானம் கோவிலில் விழுந்து  விபத்துக்குள்ளானதில் விமானி ஒருவர் உயிரிழந்தார் என்றும் மற்றொருவர் காயமடைந்தார் எனவும் ரேவா எஸ்பி நவ்நீத் பாசின் தெரிவித்தார். இது ஒரு தனியார் பயிற்சி நிறுவனத்தின் விமானம் என்றும், கோயிலின் குவிமாடம் மற்றும் மின் கேபிள்களில் மோதி விபத்துக்குள்ளானதாகவும் கூறப்படுகிறது.

இந்த விபத்தில் விமானி உயிரிழந்த நிலையில், துணை விமானி சஞ்சய் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். முதற்கட்ட தகவலில், மோசமான வானிலை மற்றும் அப்பகுதியில் நிலவும் பனிமூட்டம் ஆகியவை விபத்துக்கான காரணம் என்று கூறப்படுகிறது.