முதல் 5 நாட்களில் PM CARES நிதிக்கு ரூ.3,076 கோடி.! பெயர்கள் வெளியிடாதது ஏன்? ப.சிதம்பரம்.!

Default Image

பிரதமர் பொதுநிவராண நிதிக்கு, முதல் 5 நாட்களில் ரூ.3,076 கோடி கிடைத்துள்ளது என்று நிதியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, தடுப்பு நடவடிக்கைகளுக்காக நிதி உதவி அளிக்கும்படி, கடந்த மார்ச் மாதம் 27-ஆம் தேதி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து, விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் தங்களால் முடிந்த நிதியுதவியை அளித்தனர்.  இந்நிலையில், பிரதமர் பொதுநிவராண நிதிக்கு, முதல் 5 நாட்களில் ரூ.3,076 கோடி கிடைத்துள்ளது என்று நிதியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 1 முதல் 6 வரையிலான குறிப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், அவை பொதுவாக பகிரப்படுத்தவில்லை. இதில், பிரதமர் பொதுநிவாரண நிதியில் முதல் 5 நாட்களில் ரூ.3,076 கோடியில், ரூ.3,075.85 கோடி உள்நாட்டு தன்னார்வ பங்களிப்பிலும்,. ரூ.39.67 லட்சம் வெளிநாட்டு பங்களிப்பிலும் வந்துள்ளது. மேலும், பி.எம் கேர்ஸின் ஆரம்ப கார்பஸ் ரூ. 2.25 லட்சம் இருந்ததாகவும், இந்த நிதிக்கு சுமார் ரூ.35 லட்சம் வட்டி கிடைத்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பங்களிப்பாளர்கள் அல்லது நன்கொடையாளர்களின் விவரங்களும் அரசாங்கத்தால் வெளியிடப்படவில்லை.

இதுகுறித்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவரது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், 2020 மார்ச் 26 முதல் 31 வரை வெறும் 5 நாட்களில் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.3076 கோடி வந்துள்ளதாக PM CARES FUND-இன் தணிக்கையாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால், இந்த நன்கொடையாளர்களின் பெயர்கள் வெளியிடப்படாது ஏன்? ஒவ்வொரு தன்னார்வ தொண்டு நிறுவனமும், அறக்கட்டளையும் ஒரு தொகையை விட அதிகமாக பங்களிக்கும் நன்கொடையாளர்களின் பெயர்களை வெளிப்படுத்த கடமைப்பட்டுள்ளது. PM CARES FUND இந்த கடமையில் இருந்து ஏன் விலக்கு? அளிக்கப்பட்டுள்ளது. நன்கொடையாளர்களின் பெயர்களை வெளிப்படுத்த அறங்காவலர்கள் ஏன் பயப்படுகிறார்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts