பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை

பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக  முதலில் ஏப்ரல் 14 -ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.அதன் பின்னர் கொரோனா தீவிரம் அடைந்து வந்த  நிலையில் மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.இதனிடையே இன்று பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டது.இந்த ஆலோசனையில் ஊரடங்கை நீட்டிக்கப்படுவதா? இல்லை வேண்டாமா ? என்று ஆலோசிக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் . பிரதமருடனான ஆலோசனையில் தமிழக முதல்வர் பழனிசாமி, சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.