முகக்கவசம் அணியாததால் ஒரு நாட்டு தலைவருக்கு ரூ.13,000 அபராதம் – பிரதமர் மோடி

கொரோனா விதிமீறலுக்காக ஒரு நாட்டின் பிரதமருக்கு 13 ஆயிரம் ரூபாய் அபராதம் என தெரிவித்தார்.
பிரதமர் மோடி தற்போது நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது ஊரடங்கு தொடர்பாக 6-வது முறையாக நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றுகினார். கொரோனாவால் இந்தியாவில் உயிரிழப்பவர்களின் விகிதம் குறைவாக உள்ளது. பொதுமுடக்கத்தை பல இடங்கள் சரியாக பின்பற்றவில்லை. பிற நாடுகளை ஒப்பிடுகையில், நமது நாடு கொரோனவை சிறப்பாக எதிர்கொண்டுள்ளது.
பொதுமுடக்க தளர்வுகளால் மக்கள் பலர் முகக்கவசம் அணியாமல் பொறுப்பற்ற முறையில் உள்ளனர். இந்நிலையில் கொரோனா விதிமீறலுக்காக ஒரு நாட்டின் பிரதமருக்கு 13 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதை பார்க்கிறோம் என தனது உரையில் எடுத்துரைத்துள்ளார். மேலும் சட்டத்தைவிட பெரியவர்கள் யாரும் இல்லை என்றும் வெளியில் செல்லும் போது யாராக இருந்தாலும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025