PM Modi - Mallikarjun kharge - Rahul gandhi
Election2024 : மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை மாற்ற மாட்டோம் என காங்கிரஸ் உத்தரவாதம் அளிக்குமா என பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வரும் வேளையில் தேர்தல் பிரச்சார வேலைகளில் அரசியல் தலைவர்கள் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அப்போது மற்ற கட்சி தலைவர்கள் மீதான விமர்சனங்களை முன்வைக்கவும், அவர்களின் விமர்சனங்களுக்கு பதில் கொடுக்கவும் அரசியல் தலைவர்கள் தவறுவதில்லை.
தற்போது காங்கிரஸ் – பாஜக இடையே இடஒதுக்கீடு விவகாரம் என்பது தீவிரமடைந்து வருகிறது. முன்னதாக காங்கிரஸ் தங்கள் தேர்தல் அறிக்கையில், சாதிவாரி கணக்கெடுப்பை கண்டிப்பாக நடத்துவோம். அதன் மூலம் பொருளாதர ரீதியில் பின்தங்கிய சமூகத்திற்கு ஏற்றபடி இடஒதுக்கீட்டில் மாற்றம் கொண்டுவரப்படும் என்று உறுதி அளித்து இருந்தனர்.
இதனை கடுமையாக விமர்சித்து வரும் பாஜக தலைவர்கள், காங்கிரஸ் சட்டத்திற்கு புறம்பாக இடஒதுக்கீட்டை பறிக்க பார்க்கிறது என்று தங்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இதுகுறித்து நேற்று குஜராத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி மீண்டும் காங்கிரஸ் மீதான தனது விமர்சனங்களை முன்வைத்தார்.
அப்போது அவர் கூறுகையில், தான் இருக்கும் வரை SC/ST, OBC,EWS பிரிவினர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டை சீர்கெடுக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். இடஒதுக்கீட்டை பாஜக தலைமையிலான அரசு பாதுகாத்து அவர்களின் உரிமைகளை நிலைநாட்டும் என்று குறிப்பிட்டார்.
அதேபோல, மதத்தின் பெயரால் இடஒதுக்கீட்டை தவறாக பயன்படுத்த மாட்டோம். இடஒதுக்கீட்டை மாற்றியமைத்து அரசியலமைப்போடு விளையாட மாட்டோம் என நாங்கள் கூறுகிறோம். அதே போல, காங்கிரஸ் மற்றும் I.N.D.I.A கூட்டணி கட்சிகள் எழுத்துபூர்வமாக இதனை உறுதியளிக்க முடியுமா என நான் சவால் விடுகிறேன் என பிரதமர் மோடி பேசினார்.
மத அடைப்படையில், சிறுபான்மையினருக்கு (இஸ்லாமியர்களுக்கு) இடஒதுக்கீடு வழங்க அரசியல் அமைப்பை மாற்ற மாட்டோம் என காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு நான் சவால் விடுகிறேன். 2024 ஆம் ஆண்டு அவர்கள் அதிகமாக பொய் கூறி வருகின்றனர். இந்திய அரசியலமைப்பை தவறாக மக்களிடத்தில் கூறி வருகின்றனர். நாங்கள்(பாஜக) இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என போலி வீடியோக்களை பரப்புகின்றனர்.
மதத்தின் பெயரால் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் முயற்சி செய்கிறது. நான் மீண்டும் உறுதியாக கூறுகிறேன். அம்பேத்கர் வகுத்த அரசியல் அமைப்பின்படி உள்ள SC/ST , OBC வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை நாங்கள் மாற்ற மாட்டோம். பாஜக ஆட்சியில் இடஒதுக்கீடு பாதுகாக்கப்படும் என குஜராத்தில் தனது பிரச்சார உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
கர்நாடகா : மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னாவை கர்நாடக அரசு சார்பில், 2 வருடத்திற்கு ரூ.6.20…
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
டெல்லி : காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள ஐஎஸ்ஐ முகவர்களைச் சுற்றி விசாரணை தீவிரமாக…
கோயம்புத்தூர் : இன்ஸ்டாகிராமில் பிரபலமான வைஷ்ணவி என்கிற கோவையைச் சேர்ந்த இளம் பெண் தவெகவில் உறுப்பினராக இருந்தவர். அண்மையில், தவெகவில்…
மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்குள் அடுத்தடுத்த இரண்டு நபர்கள் நுழைய முயன்றுள்ளனர். சல்மானின் வீட்டிற்கு வெளியே…