இந்தியா – வங்கதேசம் இடையே ரயில் சேவை தொடக்கம்

PM Narendra Modi and Bangladesh PM Sheikh Hasina jointly inaugurate the Chilahati-Haldibari rail link between India & Bangladesh

இந்தியா – வங்கதேசம் இடையே ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா தொடங்கி வைத்தார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா ஆகியோருக்கு இடையிலான மெய்நிகர் உச்சி மாநாடு நடைபெற்றது. இருதரப்பு உறவுகள் தொடர்பாகவும்,கொரோனாவிற்கு பிந்தைய காலத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பான அனைத்து அம்சங்கள் குறித்தும் இரண்டு தலைவர்களும் ஆலோசித்தார்கள்.

இதனை பின் 55 ஆண்டுகளுக்கு பிறகு சிலஹதி – ஹல்திபாரி இடையே ரயில் சேவையை இரு நாட்டு தலைவர்களும் தொடங்கி வைத்தார்கள். மேலும் இரு நாட்டு தலைவர்களும் வங்கதேசத்தின் முதல் அதிபர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் நினைவு தபால்தலையை வெளியிட்டார்கள்.