351 கி.மீ நீளமுள்ள சரக்கு ரயில் போக்குவரத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

PM Narendramodi inaugurates the new Bhaupur- new Khurja section of Eastern Dedicated Freight, via video-conferencing

நியூ பாபூர் – நியூ குர்ஜா வழித்தடத்தில்  சரக்கு ரயில் போக்குவரத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

351 கி.மீ நீளமுள்ள நியூ பாபூர் – நியூ குர்ஜா ரயில் போக்குவரத்து வழித்தடம் உத்தரப்பிரதேசத்தில் ரூ.5,750 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.இந்த வழித்தடம், கான்பூர்- டெல்லி இடையில் உள்ள முக்கிய வழித்தடத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும்.குறிப்பாக இந்திய ரயில்வே விரைவு ரயில்களை இயக்க வழிவகுக்கும்.

இந்நிகழ்ச்சியின் போது, உத்தரப்பிரதேசம் கிழக்கத்திய பிரத்யேக சரக்கு ரயில் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.பிரயாக்ராஜில் அமைக்கப்படும் நவீன சரக்குப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையம் (ஓசிசி), கிழக்கத்திய பிரத்யேக சரக்கு ரயில் போக்குவரத்தின் கட்டுப்பாட்டு மையமாகச் செயல்படும். இந்த ஓசிசி, உலகளவில் மிகப்பெரிய அமைப்புகளில் ஒன்று. மிக நவீன வடிவில் இது சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடம் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் ‘கிரிகா 4’ தரத்தில் ‘சுகம்யா பாரத் திட்டத்தின்’ விதிமுறைகளின் படி உருவாக்கப்பட்டுள்ளது.