'பிரபுத்த பாரதா'-வின் 125-ஆம் ஆண்டு விழா – பிரதமர் நரேந்திர மோடி உரை

PM to address 125th anniversary celebrations of ‘Prabuddha Bharata’ on 31st January

விவேகானந்தரால் தொடங்கப்பட்ட ‘பிரபுத்த பாரதா’-வின் 125-ஆம் ஆண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார்.

இது தொடர்பாக பிரதமர்  அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியாவின் பண்டைய ஆன்மிக ஞானம் குறித்த செய்திகளை பரப்புவதற்கான முக்கிய ஊடகமாக ‘பிரபுத்த பாரதா’ திகழ்கிறது. சென்னையில் தொடங்கப்பட்ட  இந்த த்திரிகை, இரண்டு வருடங்கள் கழித்து ஆல்மோராவில் இருந்து வெளியிடப்பட்டது. 1989 ஏப்ரலில் இருந்து அத்வைத ஆசிரமத்தில் இருந்து வெளியாகி வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 1896ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தரால் தொடங்கப்பட்ட ராமகிருஷ்ண இயக்கத்தின் மாதாந்திர சஞ்சிகையான ‘பிரபுத்த பாரதா’-வின் 125-ஆம் ஆண்டு விழாவில் பிரதமர்  நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார். மாயாவதியில் உள்ள அத்வைத ஆசிரமத்தால் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது.