அசோச்சேம் நிறுவன வாரம் – பிரதமர் மோடி இன்று சிறப்புரை

அசோச்சேம் நிறுவன வாரம் 2020-இல் இன்று காலை 10.30 மணிக்கு காணொலி மூலமாக பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்ற இருக்கிறார்.
இந்தியாவின் அனைத்துப் பகுதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வர்த்தக சங்கங்களால் 1920-ஆம் ஆண்டு அசோச்சேம் தொடங்கப்பட்டது. 400 சங்கங்கள் மற்றும் வர்த்தக அமைப்புகளை தன்னகத்தே கொண்ட அசோச்சேம், நாடு முழுவதுமுள்ள 4.5 லட்சம் உறுப்பினர்களுக்கு தனது சேவைகளை வழங்குகிறது. இந்தியத் தொழில் துறையின் அறிவுசார் ஊற்றாக அசோச்சேம் விளங்குகிறது.
இந்நிலையில் ‘இந்த நூற்றாண்டின் அசோச்சேம் நிறுவனம்’ விருதை டாட்டா குழுமத்தின் சார்பாக பெறவிருக்கும் ரத்தன் டாட்டாவுக்கு இந்நிகழ்ச்சியின் போது பிரதமர் மோடி வழங்குகிறார்.