அசாம் மற்றும் மேற்குவங்க மாநிலங்களுக்கு இன்று பிரதமர் மோடி பயணம்

PM to visit Assam and West Bengal today

அசாம் மற்றும் மேற்குவங்க மாநிலங்களுக்கு இன்று பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார்.

காலையில் அசாம் மாநிலத்தில் இரண்டு மருத்துவமனைகளுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர், மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய மாவட்ட சாலைகளையும் மேம்படுத்துவதற்கான `அசாம் மாலா’ என்ற திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார். அசாமில் சோனிட்பூர் மாவட்டம் தேக்கியாஜுலியில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன்பிறகு மாலை  மேற்குவங்க மாநிலம் ஹால்டியாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் முக்கிய கட்டமைப்பு திட்டத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார் பிரதமர் மோடி.