பிரதமர் மோடி தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

PMModi will chair an all-party meeting of floor leaders in RajyaSabha and LokSabha today to discuss the corona situation.

இந்தியா சார்ப்பில் கொரோனா தடுப்பூசி தயாரித்து வரும் நிலையில்,பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடைபெறுகிறது.

இந்தியாவில் பரவி வரும் கொரோனாவை  கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது மேலும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பல்வேறு  வழிகாட்டுதல்களை மத்திய அரசு வழங்கி வருகிறது. அந்தந்த மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.குறிப்பாக மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.அந்த வகையில் தான் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடைபெறுகிறது.இந்த அனைத்து கூட்டத்தில் கொரோனா தடுப்பூசி இந்தியாவும் தயாரித்து வரும் நிலையில் இது குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.காணொளி மூலமாக நடைபெறும் இந்த ஆலோசனையில்,மக்களவை,மாநிலங்களவை தலைவர்கள் ,மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் , உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.