பெண்களே உஷார்...புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டல்..! சிக்கிய இளைஞர்..!

பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

சமூக ஊடகங்களில் உள்ள பெண்களின் முகப்பு புகைப்படங்களை எடுத்து ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். குஜராத்தில் உள்ள காந்திநகரைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவர் சமூக ஊடகங்களில் இருந்து பெண்களின் முகப்பு புகைப்படங்களை அவர்களுக்கே தெரியாமல் எடுத்து, அதனை ஆபாசமாக மார்பிங் செய்துள்ளார். மார்பிங் செய்ததோடு அந்த புகைப்படங்களை அவர்களுக்கே அனுப்பி மிரட்டி ரூ.500 முதல் ரூ.4,000 வரை பணம் கேட்டுள்ளார்.

இவர் மிரட்டிய சிலர் தற்கொலைக்கும் முயற்ச்சி செய்துள்ளனர். ஆபாசமாக மார்பிங் செய்ததால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் உள்ளூர் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் 19 வயதான ஆதித்யா பிரசாந்த் என்ற இளைஞரை  காவல்துறையினர் கைது செய்தனர்.

அவர் காந்திநகரில் ஒரு அறுவை சிகிச்சை முகமூடி உற்பத்தி பிரிவில் பணிபுரிந்து வருகிறார். இதுவரை 33 பெண்களை பிரசாந்த் ஏமாற்றியுள்ளதாகவும், அதில் 22 பெண்கள் போலீசில் புகாரளித்துள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். ஆதித்யா பிரசாந்த் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக அவர்கள் மேலும் கூறினர்.