கேரளாவில் சபரிமலை கோயில் சன்னிதானத்தில் உள்ள செய்தியாளர்கள் வெளியேற கேரள காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி கேரளா மாநில சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.இந்த தீர்ப்பை செயல்படுத்துவதற்கு இந்து அமைப்புகளும், ஐயப்ப பக்தர்கள் சங்கமும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. தமிழகம், கேரளத்தில் பல்வேறு பகுதிகளில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றது.
unknown nodeஇந்நிலையில் கேரள காவல்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் பம்பை, சபரிமலை கோயில் சன்னிதானத்தில் உள்ள செய்தியாளர்கள் வெளியேற அறிவுறுத்தியுள்ளது.செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடக்கப்போவதாக தகவல் வந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.