வந்தே பாரத் ரயில் உணவில் பாலிதீன் பை... பயணியின் புகாருக்கு ரயில்வே பதில்.!

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் கொடுக்கப்பட்ட உணவில் பாலிதீன் பை இருந்ததாக பயணி ஒருவர் பகிர்ந்த வீடியோ வைரலாகிவருகிறது.

VandeBhrath food

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் கொடுக்கப்பட்ட உணவில் பாலிதீன் பை இருந்ததாக பயணி ஒருவர் பகிர்ந்த வீடியோ வைரலாகிவருகிறது.

நாட்டின் அதிவிரைவு ரயில் என அழைக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணி ஒருவருக்கு கொடுக்கப்பட்ட உணவில் சிறிய பாலிதீன் பை கிடந்துள்ளது. இதனை வீடியோவாக அந்த பயணி தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வேகமாகப் பரவி வருகிறது.

குவாலியரில் இருந்து ராணி கமலாபதிக்கு சென்று கொண்டிருந்த, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் அந்த பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் பாலித்தீன் பை துண்டு சிக்கியதாக, அவர் புகார் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ பகிரப்பட்டதை அடுத்து ரயில்வே சேவா நிர்வாகம் அவருக்கு பதில் ட்வீட் செய்துள்ளது.

ரயில்வே சேவா அவருக்கு பதிலளித்த ட்வீட்டில், உங்களது புகார் ரயில்மடாடில்(RailMadad) பதிவு செய்யப்பட்டுள்ளது, உங்களது புகாரைக் கண்காணிப்பதற்கான இணைப்பையும் வழங்கியுள்ளதாக பதில் ட்வீட் அனுப்பியுள்ளது.

unknown node