அசாம் மற்றும் அந்தமான், நிகோபர் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்தமான், நிகோபர் தீவுப்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகியுள்ளது என நில அதிர்வுக்கான தேசிய மையம் (NCS) தெரிவித்துள்ளது.
unknown nodeஅந்தமான் தீவுக்கூட்டத்தில் உள்ள வடக்கு அந்தமான் தீவில் உள்ள நகரமான திக்லிபூருக்கு கிழக்கே 137 கி.மீ ஆழத்தில் தாக்கியுள்ளது. தற்பொழுது, சுனாமி குறித்த எச்சரிக்கை குறித்த எந்த தகவலும் வெளியாக வில்லை.
மேலும், அசாமின் சோனிட்பூரில் இன்று காலை 8:03 மணியளவில் 4.4 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 15 கிமீ ஆழத்தில் தாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
unknown node