ஜம்மு காஷ்மீரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியில் இன்று (புதன் கிழமை) காலை 10:10 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் (NCS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 4.0 என்ற ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் ஜம்மு மற்றும் காஷ்மீரில் 10 கி.மீ ஆழத்தில் தாக்கியுள்ளது. மேலும், இதனால் உயிர்ச்சேதம் மற்றும் பொருள்சேதம் ஏதும் ஏற்பட்டுள்ளதா. என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.
unknown node