லடாக்கில் 4.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! அதிர்ச்சியில் மக்கள்..!

லடாக்கின் கார்கிலுக்கு வடக்கே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

earthquake

லடாக்கின் கார்கிலுக்கு வடக்கே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

சமீபகாலமாக இந்தியாவின் பல பகுதிகளில் அதிக அளவில் நிலநடுக்கங்கள் பதிவாகி வருகின்றன. அந்தவகையில் தற்பொழுது, லடாக்கில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவாகியுள்ளது என நில அதிர்வுக்கான தேசிய மையம் (National Center for Seismology) தெரிவித்துள்ளது.

இன்று காலை சுமார் 7:38 மணியளவில் லடாக்கின் கார்கிலுக்கு வடக்கே 401 கிமீ தொலைவில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம், சுமார் 150 கிமீ ஆழத்தில் தாக்கியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் உயிர்சேதம் மற்றும் பொருள்சேதம் ஏதும் ஏற்பட்டதா என்ற தகவல் வெளியாகவில்லை. இவ்வாறு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சியிலும், அச்சத்திலும் உள்ளனர்.

unknown node