பாஜக மூத்த தலைவரான அத்வானியின் பிறந்தநாள் – நேரில் சென்று வாழ்த்திய பிரதமர் மோடி.!

பாஜக மூத்த தலைவரான அத்வானியின் பிறந்தநாளுக்கு நேரில் சென்று பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவரான அத்வானியின் பிறந்தநாளுக்கு நேரில் சென்று பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவரான அத்வானி இன்று தனது 93-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல அரசியல் தலைவர்களும்,கட்சி நிர்வாகிகளும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் பிரதமர் மோடி அத்வானியின் இல்லத்திற்கு சென்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் .

பிரதமர் மோடி பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் அவரது காலில் விழுந்தும் மோடி அவர்கள் ஆசீர்வாதம் வாங்கியுள்ளார் . உள்துறை அமைச்சரான அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவரான ஜேபி நட்டா ஆகியோரும் பிரதமர் மோடியுடன் நேரில் சென்று அத்வானிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் .  இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படங்களுடன் பகிர்ந்த டுவிட்டர் பதிவில் கட்சியை மக்களிடம் கொண்டு சென்று நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய மதிப்பிற்குரிய ஸ்ரீ எல்.கே.அத்வானி ஜி அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் ,  மேலும் அவர் மில்லியன் கணக்கான கட்சி தொண்டர்கள் மற்றும் நாட்டு மக்களுக்கும் வாழும் உத்வேகமாக இருக்கிறார் என்றும், அவர் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ பிரார்த்தனை செய்வதாகவும்  பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மேலும் அவரின் வீட்டில் சென்று சந்தித்ததை குறித்து பதிவிட்ட மோடி ,  அவருடன் நேரத்தை செலவிடுவது எப்போதும் மகிழ்ச்சியை அளிப்பதாகவும்,  என்னை போன்ற பலருக்கு அத்வானி ஜி அவர்களின் அன்பும், ஆதரவும்,வழிகாட்டுதலும் விலைமதிப்பற்றது என்றும், நாட்டின் வளர்ச்சிக்காக அவர் செய்த பங்களிப்புகள் மிகவும் மகத்தானவை என்றும் தெரிவித்துள்ளார்.

unknown nodeunknown node