#BREAKING: பிப்ரவரி 14-ல் பிரதமர் மோடி தமிழகம் வருகை ..!

Prime Minister Modi is also scheduled to visit Tamil Nadu on February 14 to lay the foundation stone for the Cauvery Connection Project.

சமீபத்தில் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு அரசு முறை திட்டங்களை திறந்து தொடங்கி வைப்பதற்கு வரவேண்டும் என்ற அழைப்பிதழை நேரடியாக முதல்வர் வழங்கினார். இதைத்தொடர்ந்து, பிரதமர் அலுவலகம் பிரதமர் மோடி தமிழகம் வருகையை உறுதி செய்துள்ளது.

அதன்படி, பிரதமர் மோடி  வருகையின் போது வண்ணாரப்பேட்டை – விம்கோநகர் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைப்பதற்காகவும், காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்காகவும் பிப்ரவரி 14-ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகத்திற்கு வர திட்டமிட்டமிடப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு பின்னர் பிரதமர் மோடி முதல் முறையாக தமிழகம் வருகிறார். தற்போது அதிமுக, பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜே.பி நட்டா நேற்று மதுரையில் நடந்த கூட்டத்தில் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், பிரதமர் மோடியின் தமிழகம் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.