மூன்று நாள் பயணமாக தென் ஆப்ரிக்கா புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி. அதன்படி, டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி தென் ஆப்பிரிக்கா புறப்பட்டார். தென் ஆப்ரிக்காவின் ஜோகன்ஸ்பெர்க் நகரில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க உள்ளார். 15வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி சிரில் ரமபோசாவின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி புறப்பட்டார்.
ஜோகன்ஸ்பெர்க் நகரில் இன்று முதல் ஆக.24ம் தேதி வரை பிரிக்ஸ் மாநாடு நடைபெறுகிறது. தென் ஆப்பிரிக்கா பயணத்தை முடித்துக்கொண்டு கிரீஸ் நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக பிரதமர் மோடி அறிக்கை வெளியிட்டுள்ளார். கிரீஸ் நாட்டுக்கு முதன்முறையாக பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் பிரதமர் மோடி தகவல் தெரிவித்துள்ளார். 40 ஆண்டுகளுக்கு பிறகு கிரீஸ் நாட்டுக்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி.
unknown node