சிறந்த தீர்வு அளிப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு – பிரதமர் மோடி ட்வீட்.!

கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த யோசனைகள் இருந்தால் பகிருங்கள் என்று பிரதமர் மோடி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கொரோனா வைரஸ் தாக்குதலை

கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த யோசனைகள் இருந்தால் பகிருங்கள் என்று பிரதமர் மோடி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த யோசனை இருந்தால் பகிருங்கள் என்றும் சிறந்த தீர்வு அளிப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று பதிவிட்டுள்ளார். மேலும் கொரோனா  வைரஸுக்கான தீர்வுகளை நிறைய பேர் பகிர்ந்து கொண்டியிருக்கின்றன அதனை தொடர்ந்து செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

unknown node

இந்நிலையில் சீனாவில் தொடங்கி சுமார் 127 நாடுகளில் பரவி இருக்கும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்தியாவில் இதுவரை 110 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் டெல்லி மற்றும் கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மத்திய, மாநில அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலமாக பரவி வருவதால், கொரோனா வைரஸை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.