பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் உள்ள ரகப் கஞ்ச் சாகிப் குருத்வாராவுக்கு திடீரென சென்றது, அங்குள்ள மக்களை வியப்பில் ஆழ்த்தியது.
பிரதமர் நரேந்திர மோடி, இன்று காலை டெல்லியில் உள்ள ரகப் கஞ்ச் சாகிப் குருத்வாராவுக்கு திடீரென சென்று, அங்கு சிறிது நேரம் தியானம் செய்தார். குருத்வாராவுக்கு பிரதமர் மோடி ஆரஞ்சுத் துணியால் தலையை மறைத்து பிரகாசமான மஞ்சள் குர்தாவுடன் இடுப்பு கோட் அணிந்து சீக்கிய முறைப்படி வருகை தந்தார். மேலும், எந்த ஒரு அறிவிப்புமின்றி வருகை தந்தது அங்குள்ள மக்களை வியப்பில் ஆழ்த்தியது.
குரு தேஜ் பகதூரை வழிபட்ட பின், சீக்கிய மதகுருக்கள் அளித்த மரியாதையை ஏற்றுக்கொண்டார். வழிபாட்டினை முடித்தபின் குருத்வாராவிலிருந்து வெளியே வந்தபோது அங்கிருந்த மக்கள், பிரதமருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதுகுறித்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
unknown node