பிரதமர் மோடி உரை! மக்களவைக்கு ராகுல் காந்தி வருகை!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து மணிப்பூர் விவகாரம் உள்ளிட்ட நாட்டில் உள்ள பிரச்சனைகள் குறித்து பிரதமர் மோடி இரு அவைகளிலும் பேச வேண்டும்

rahul&modi

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து மணிப்பூர் விவகாரம் உள்ளிட்ட நாட்டில் உள்ள பிரச்சனைகள் குறித்து பிரதமர் மோடி இரு அவைகளிலும் பேச வேண்டும் என்று இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சிகள் எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் அவை சரியாக நடைபெறாமல் முடங்கி வந்தது. அதுமட்டுமில்லாமல், மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி பேச வேண்டும் என்று எதிரிக்கட்சிகள் நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தனர்.

இந்த தீர்மானத்தின் மீதான விவாத கடந்த இரு நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், இன்றும் தொடர்கிறது. மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தின் மீதான விவாதத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பங்கேற்று மத்திய அரசை கடுமையாக விமர்சித்து ஆவேசமாக பேசியிருந்தார். இதன்பின், இரு தரப்பிலும் பலரும் விவாதத்தில் பங்கேற்றனர். இருப்பினும், இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி பேச உள்ளார் என கூறப்பட்டது.

அதன்படி, சிறது நேரத்திற்கு முன்பு நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேறக் மக்களவைக்கு வருகை புரிந்தார் பிரதமர். தற்போது, உரையாற்றியும் வருகிறார். இந்த நிலையில்,  பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் உரையாற்றி வரும் நிலையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மக்களவைக்கு வருகை தந்துள்ளார். பிரதமர் மோடி நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது உரையாற்றி வரும் நிலையில், அதனை உன்னிப்பாக கவனித்துக்கொண்டு அவையில் அமர்ந்துள்ளார் ராகுல் காந்தி.