புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு பிரதமர் அஞ்சலி :
புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். கடந்த 2019 ஆம் ஆண்டு இதே நாளில் புல்வாமா என்ற இடத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் 40க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் உயிர் இழந்தனர். அவர்களின் தியாகத்தையும், தாக்குதலில் அவர்கள் மறைந்ததையும் நினைவு கூறும் வகையில் சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு பிரதமர் மோடி இன்று அஞ்சலி செலுத்தினார்.
unknown nodeஇதனை அடுத்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “புல்வாமாவில் இந்த நாளில் நாம் இழந்த வீரமிக்க வீரர்களை நினைவு கூறுகிறோம். அவர்கள் தியாகத்தை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம்”என்று கூறினார். அவர்களின் தைரியம் வலுவான மற்றும் மலர்ந்த இந்தியாவை உருவாக்க எங்களை தூண்டுகிறது என்று அவர் மேலும் கூறினார்.
unknown node