பாஜக அரசின் ஊழல் பட்டியலை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் பிரியங்கா காந்தியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் நடைபெற்ற பேரணியில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா உரையாற்றினார். அதில் ஆளும் பாஜக ஊழலில் மிதப்பதாக குற்றம் சாட்டினார். பிறகு, அவர் மோசடிகள் குறித்த பட்டியலை படிக்க வந்தபோது, மோசடிகளின் பட்டியலைக் கண்டுபிடிக்கத் தடுமாறினார்.
இறுதியில் அந்தப் பகுதியைத் தவிர்த்து, அதைப் பற்றி பிறகு சொல்கிறேன் என்று பார்வையாளர்களிடம் கூறிவிட்டு தனது உரையை மீண்டும் தொடங்கினார். இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பாஜக ஆதரவாளர்களால் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது.
unknown nodeஇதன்பின், மணிப்பூரில் ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் பிரதமர் தாமதமாக பதிலளித்ததற்காக பிரியங்கா காந்தி விமர்சித்தார். மேலும், குவாலியரில் உரையாற்றிய பிரியங்கா, சுதந்திரப் போராட்ட வீராங்கனை ராணி லட்சுமிபாயை நினைவு கூறும் வகையில் அவரது சாதனைகள் குறித்து பேசினார்.
