சிங்கப்பூரின் இரண்டு செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தம்.
சிங்கப்பூர் நாட்டின் இரண்டு செயற்கை கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, சிங்கப்பூரின் இரண்டு செயற்கை கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட்டை இஸ்ரோ நிறுவனம் இன்று மதியம் 2.19க்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
750 எடை கொண்ட ‘டெலியோஸ் – 02’ என்ற புவி கண்காணிப்பு செயற்கைகோளை பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட் சுமந்து சென்றது. இந்த நிலையில், இஸ்ரோ ஏவிய பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட் சிங்கப்பூரின் இரண்டு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தியுள்ளது.
‘டெலியோஸ் – 02’ என்ற செயற்கைகோள் சரியான சுற்றுவட்ட பாதையில் விண்ணில் நிறுத்தப்பட்டதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். டெலியோஸ்-2 செயற்கைக் கோளானது புவி ஆய்வு, இயற்கை பேரிடர் கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளது.