புதுச்சேரியில் கனமழை காரணமாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை!

Puducherry Chief Minister Narayanasamy has said that government and private schools in Puducherry will be closed due to heavy rains.

கனமழை காரணமாக புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  நிவர் மற்றும்  புரெவி புயல் காரணமாக புதுச்சேரியில் கனமழை பெய்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக மழை பெய்யாமல் ஒய்ந்திருந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் புதுச்சேரி நகர மற்றும் கிராம பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனையடுத்து, புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அவர்கள் தெரிவித்துள்ளார். இதேபோல் காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.