புதுச்சேரி டி.ஜி.பி. டெல்லிக்கு இடமாற்றம் – மத்திய உள்துறை அமைச்சகம்

Puducherry DGP Balaji Srivastava has been transferred to Delhi and Ranveer Singh Krishna has been appointed as the Puducherry DGP.

புதுச்சேரி டிஜிபி பாலாஜி ஸ்ரீவத்சவா டெல்லிக்கு இடமாற்றம் செய்து, அவருக்கு பதிலாக புதுச்சேரி டி.ஜி.பி.யாக ரன்வீர் சிங் கிருஷ்யா நியமனம் செய்யப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் புதுச்சேரி மாநில காவல்துறையில் டிஜிபியாக சுந்தரி நந்தா பணியாற்றி வந்தார். 1988-ம் ஆண்டு ஐ.பி.எஸ். பெண் அதிகாரியான சுந்தரி நந்தா, புதுச்சேரி மாநிலத்தின் நியமிக்கப்பட்ட முதல் டி.ஜி.பி பெண் அதிகாரி ஆவார். டெல்லியில் பணியாற்றிய அவர், புதுச்சேரிக்கு மாற்றப்பட்டார்.

இதையடுத்து, திடீரென சுந்தரி நந்தாவை டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. அவருக்கு பதிலாக மிசோரம் மாநிலத்தில் டிஜிபியாக பணியாற்றிய பாலாஜி ஸ்ரீவத்சவா புதுச்சேரிக்கு புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்டது. இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்தது. இந்த நிலையில் தற்போது டிஜிபி பாலாஜி ஸ்ரீவத்சவா டெல்லிக்கு இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.