புதுச்சேரி ஆளுநர் தமிழிசை விருந்து – முதல்வர் ரங்கசாமி பங்கேற்பு.! திமுக, காங்கிரஸ் புறக்கணிப்பு.!

நாட்டின் 77-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அளித்த தேநீர் விருந்தில் அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி

puducherry tea party

நாட்டின் 77-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அளித்த தேநீர் விருந்தில் அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி பங்கேற்றார். புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நடந்த தேநீர் விருந்தில் சபாநாயகர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இருப்பினும், புதுச்சேரி ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் திமுக, காங்கிரஸ், இடதுசாரி உள்ளிட்ட கட்சிகளின் எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை. இதனிடையே, சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றி தமிழிசை சவுந்தரராஜன் மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து ஆளுநர் தேநீர் விருந்து அளித்தார்.

இதுபோன்று, சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சென்னையில் இன்று மாலையில், கவர்னர் ரவி அளிக்க இருந்த தேநீர் விருந்தை புறக்கணிக்கப் போவதாக, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் அறிவித்தனர். இதன்பின் நேற்று இரவு மழையை காரணம் காட்டி, விருந்தையே ஒத்திவைப்பதாக ஆளுநர் அறிவித்தார்.