புதுச்சேரி : பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு ...!

Holidays have been declared for schools and colleges in Pondicherry and Karaikal today due to continuous rains.

தொடர் மழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே, தொடர் மழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.