புல்வாமா தாக்குதலுக்கு... ஆன்லைன் மூலம் வெடிகுண்டு தயாரிக்க பொருள் வாங்கிய... இளைஞன் உட்பட 2 பேர் கைது..!

கடந்த ஆண்டு  பிப்ரவரி 14-ம் தேதி  ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில்  சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது வெடிமருந்து நிரப்பிய வாகனத்தை கொண்டு ஜெய்ஷ் இ

கடந்த ஆண்டு  பிப்ரவரி 14-ம் தேதி  ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில்  சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது வெடிமருந்து நிரப்பிய வாகனத்தை கொண்டு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தற்கொலைப் படையை சேர்ந்த அடில் அகமது தார்  இந்த தாக்குதலை  நடத்தினார்.

இந்த கோர தாக்குதலில்  40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணமடைந்தனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது. இந்நிலையில் ஸ்ரீநகரை சேர்ந்த வைசுல் இஸ்லாம்  , புல்வாமாவை சேர்ந்த முஹம்மத் அப்பாஸ் ராதர் என்ற 2 தீவிரவாதிகளை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

வைசுல் இஸ்லாம் இந்த  தாக்குதலுக்கு வெடிகுண்டு தயாரிக்க வேதிப்பொருட்கள், பேட்டரிகள் மற்றும் பிற பொருட்களை ஆன்லைன் மூலம் வாங்கியுள்ளார். இவற்றை ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் கட்டளையின் பேரில்  வாங்கியதாக விசாரணையில்  ஒப்புக்கொண்டதாக என்ஐஏ அதிகாரி ஒருவர்கூறியுள்ளார்.

ஆன்லைன் மூலம் வாங்கிய பொருட்களை  வைசுல் இஸ்லாம் நேரடியாக தீவிரவாதிகளிடம் கொடுத்துள்ளார். இதேபோல கைதான  முஹம்மத் அப்பாஸ் ராதர் தாக்குதலை நடத்திய அடில் அகமது தார் உள்ளிட்ட 4 தீவிரவாதிகளுக்கு வீட்டில் அடைக்கலம் கொடுத்துள்ளார்.

கடந்த 3-ம் தேதி கைது செய்யப்பட்ட தாரிக் அஹம்மத் ஷா மற்றும் அவரது மகள் இன்ஷா ஜன் அவர்கள் வீட்டிற்கு தீவிரவாதிகளை பத்திரமாக அனுப்பிவைத்ததும் முஹம்மத் அப்பாஸ் ராதர் என்பது விசாரணையில் தெரிந்ததாக என்ஐஏ அதிகாரி ஒருவர் கூறிள்ளார்.