திரிபுரா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் பாஜக கூட்டணி மீண்டு ஆட்சி அமைக்கும் வகையில் முன்னிலை.
சட்டசபை தேர்தல்:
unknown nodeவடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. திரிபுராவில் கடந்த 16-ஆம் தேதியும், மேகாலயா, நாகாலாந்தில் கடந்த 27-ஆம் தேதியும் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
வாக்குப்பதிவு:
unknown nodeதலா 60 தொகுதிகளை கொண்ட 3 மாநிலங்களில், திரிபுராவில் மட்டும் 60 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மேகாலயா மற்றும் நாகாலாந்தில் தலா 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
போட்டியின்றி தேர்வு:
unknown nodeமேகாலயாவின் சோகியோங் தொகுதியில் போட்டியிட்ட ஐக்கிய ஜனதா கட்சி வேட்பாளர் இறந்ததால் அங்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதுபோன்று நாகாலாந்தில் அலுகுடோ தொகுதியில் வேறு யாரும் போட்டியிடாததால் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
மீண்டும் ஆட்சி அமைக்கும் பாஜக:
இந்த நிலையில், திரிபுரா, நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், திரிபுரா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் வகையில் முன்னிலை பெற்று வருகிறது.
unknown nodeதிரிபுரா மாநிலத்தில் ஆளும் பாஜக கூட்டணி 40 இடங்களுக்கும் மேல் முன்னிலை பெற்றுள்ளது. அதன்படி, பாஜக – திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி கூட்டணி 40 இடங்களுக்கும் மேல் முன்னிலை பெற்றுள்ளது.
மேகாலயாவில் கடும் போட்டி:
unknown nodeஇதுபோன்று நாகாலாந்தில் பாஜக கூட்டணி 36க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. நாகாலாந்தில், தேசியவாத ஜனநாயக முற்போக்கு கூட்டணி, பாஜக உடன் இணைந்து ஆட்சி அமைகிறது. மற்றொரு மாநிலமான மேகாலயாவில் தேமக 28, பாஜக 12 மற்றும் திரிணாமுல் 10 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.