வேட்புமனு தாக்கல் செய்ய கல்பெட்டா வந்தடைந்தார் ராகுல் காந்தி

Rahul Gandhi arrived in Kalpetta to file nomination in the shirt

வயநாடு மக்களவைத் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய கல்பெட்டா வந்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

இந்த ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில் கேரள மாநிலம்  வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அதேபோல்  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்திர பிரதேச மாநிலம் மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடுவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

மேலும் வயநாடு தொகுதியில் போட்டியிடுவது குறித்து  ராகுல் காந்தி விளக்கம் அளித்தார்.அவர் கூறுகையில்,தென்னிந்திய மக்கள் மோடியால் தனித்துவிடப்பட்டதாக உணர்கிறேன் என்றும்  அவர்களுடன் நான் இருக்கிறேன் என்பதை உணர்த்தவே கேரளாவில் போட்டியிடுகிறேன் என்று தெரிவித்தார்.

unknown node

எனவே கேரளாவின் வயநாடு மக்களவை தொகுதியில் ராகுல் போட்டியிடுவதை காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டது .காங்கிரஸ் வெளியிட்ட வேட்பாளர்பட்டியலில் வயநாட்டில் ராகுல் போட்டியிடுவது அறிவிக்கப்பட்டது.அதேபோல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாடு மக்களவை தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

இந்நிலையில் வயநாடு மக்களவைத் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய கல்பெட்டா வந்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.ராகுல் காந்தி ஹெலிகாப்டர் மூலம் வந்தடைந்தார்.ராகுலுடன் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் வந்துள்ளார்.